எச்சரிக்கை: மீண்டும் தாண்டவமாடும் கொரோனா - தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு!
கொரோனா மீண்டும் தலைதூக்கியுள்ள நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா
சிங்கப்பூரில் கடந்த ஒரே வாரத்தில் புதிதாக 32,035 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் 10 மடங்கு அதிகம்.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸானது பின்னர் உலகையே ஆட்டி படைத்தது. முகக் கவசம், தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் அவற்றின் பாதிப்பு குறைந்தது.
எச்சரிக்கை
இந்நிலையில், இந்த தகவல் நெஞ்சை உலுக்குகிறது. தினசரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்கள் அளவில் சராசரியாக ஒருவர் என்ற அளவில் இருந்தது இப்பொது 4 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. ’’கடந்த ஆண்டை போல இன்னொரு கொரோனா அலை இங்கு வரலாம்.
எனவே முகக் கவசம், தடுப்பூசி போடுதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்’’ என அந்த நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மக்கள்தொகையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவது,
ஆண்டு இறுதிப் பயணம், பண்டிகைக் காலங்களில் பயணம் மற்றும் சமூக தொடர்புகள் அதிகரிப்பது உள்ளிட்ட பல காரணிகளால் பாதிப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படலாம் என்று MOH எச்சரிக்கை விடுத்துள்ளது.