சிங்கப்பூரில் அசத்திய ஸ்டாலின்; கையெழுத்தான 6 ஒப்பந்தங்கள் - என்னென்ன?

M K Stalin Singapore
By Sumathi May 25, 2023 03:56 AM GMT
Report

சிங்கப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

முதலீட்டாளர்கள் மாநாடு

2024 ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

சிங்கப்பூரில் அசத்திய ஸ்டாலின்; கையெழுத்தான 6 ஒப்பந்தங்கள் - என்னென்ன? | Cm Stalin In Singapore Investors Conference

அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அரசு உயரதிகாரிகளும் சென்றுள்ளனர். அதில், முதலீடுகளுக்கான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

ஒப்பந்தங்கள்

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Singapore Indian Chamber of Commerce and Industries (SICCI) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூரில் அசத்திய ஸ்டாலின்; கையெழுத்தான 6 ஒப்பந்தங்கள் - என்னென்ன? | Cm Stalin In Singapore Investors Conference

சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம் (Singapore India Partnership Office - SIPO) மற்றும் தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனம், FameTN மற்றும் Startup TN நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P International Pvt. Ltd., நிறுவனத்தின் இடையில் 312 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

  Singapore University of Technology & Design (SUTD) நிறுவனம், ITE Education Services நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.