பெண்கள் மீது கை வச்சா என்ன நடக்கும்னு காட்டுங்க முதல்வரே.. கொதித்த வேல்முருகன்!
கொலை சம்பவத்தில் குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேல்முருகன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
மாணவி கொலை
ராமேஸ்வரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி காதலை ஏற்க மறுத்ததால் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேஸ்வரத்தில் அரங்கேறி இருக்கும் கொடூர நிகழ்வு, பெண்களுக்கு எதிரான அச்சத்தையும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய பெரும் கேள்வியையும் எழுப்புகின்றன.
இச்சம்பவத்திற்கு காரணமான குற்றவாளி முனியராஜ் மீது உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்றம் மூலம் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கில் எந்தவித தாமதமும், தளர்வும் இருக்கக் கூடாது.
வேல்முருகன் வலியுறுத்தல்
இனி வரும் காலங்களிலாவது, பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவல்துறை கண்காணிப்பை மேம்படுத்தியும் கல்வி நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியும் செயல்பட வேண்டியது அவசியம்.

உயிரிழந்த மாணவி ஷாலினியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், ஷாலினியின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக, ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.