+2 மாணவி குத்தி கொலை; இளைஞர் வெறிச்செயல் - உறவினர்கள் சாலை மறியல்
காதலிக்க மறுத்த மாணவியை இளைஞர் குத்தி கொலை செய்துள்ளார்.
காதலுக்கு மறுப்பு
ராமேஸ்வரம் அடுத்துள்ள சேரங்கோட்டை என்ற பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அப்பகுதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்ற இளைஞர் கடந்த 6 மாதங்களாக இந்த மாணவியை ஒருதலை பட்சமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மாணவி, இளைஞரின் காதலை ஏற்க மறுத்து, தன்னை பின்தொடர்ந்து வர வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
இளைஞர் வெறிச்செயல்
இந்நிலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவியை பின் தொடர்ந்து சென்ற முனியராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியைச் சரமாரியாகக் குத்தி கொலை செய்துள்ளார்.

இதில் மாணவி உயிரிழந்த நிலையில், முனியராஜை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கொலையாளியை தங்களிடம் ஒப்படைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.