காதலனுடன் தனிமை - தட்டிக்கேட்ட தந்தையை போக்சோ போடுவதாக மிரட்டிய மகள்!
காதலனுடன் தனிமைமையில் இருந்த மகளை தந்தை கண்டித்துள்ளார்.
காதலனுடன் தனிமை
கன்னியாகுமரி, கோணங்காடு பகுதியை சேர்ந்த கொத்தனாருக்கு 17 வயதில் ஒரு மகளும், 13 வயதில் மகனும் உள்ளனர். இதில் மகள் பிளஸ்-2 படித்து வருகிறார்.

மனைவியை பிரிந்து மூவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், பூட்டப்பட்டிருந்த வீட்டுக்குள் அவரது மகள், காதலனுடன் தனிமையில் இருந்துள்ளார்.
தந்தை மனஉளைச்சல்
இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை கதவை பூட்டி, காதலனை விசாரித்தார். அப்போது அந்த இளைஞர் குளச்சல் அருகே உள்ள கொத்தனார்விளையை சேர்ந்தவர் என்பதும் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதாக கூறியிருக்கிறார்.

மேலும் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக கூறி உங்கள் மீது நான் போக்சோ வழக்கு கொடுக்கிறேன் என போலீசாரிடம் கூறுவதாக மகள் தந்தையை மிரட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து, தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க மறுத்துவிட்டார். எனவே, தாயாரை தொடர்பு கொண்ட போலீசார் அவருடன் மாணவியை அனுப்பி வைத்தனர்.