பள்ளி மாணவர்களுக்கு முழு பாடங்களையும் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளி மாணவர்களுக்கு முழு பாடங்களையும் நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றால் தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாக பள்ளி திறக்கப்படாமல் இருந்தது. இதனால் பள்ளி மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
இதையடுத்து ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்ட குறைக்கப்பட்ட பாடங்களை தவிர மற்ற பாடங்களை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட சூழலில் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில்,1 முதல் 12-ம் வகுப்பு வரை கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழு பாடங்களாக நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
10-ம் வகுப்புக்கு 39%, 11 & 12-ம் வகுப்புகளுக்கு 35%, 1 முதல் 9-ம் வகுப்பு வரை 50% என்று பாடங்கள் குறைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,மாணவர்கள் வகுப்பறைக்கு செல்போன்கள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார்.