"தமிழகத்தில் 10 ,11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

school education tamil nadu may public exams minister anbil mahesh 10th 11th 12th
By Swetha Subash Jan 24, 2022 08:18 AM GMT
Report

தமிழகத்தில் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவ்ம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதனை தெரிவித்தார்.

“10 ,11, 12ம் வகுப்புகளுக்கு பாடங்களை முடிக்க வேண்டியுள்ளது. எனவே பொதுத்தேர்வு அவசியம் . அதன் அடிப்படையில் மே மாதத் தொடக்கத்திலோ இறுதியிலோ பொதுத்தேர்வு நடைபெறலாம்.

மே மாதமாக இருந்தாலும் பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் . ஊரடங்கு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்”  என்று தெரிவித்தார்.