அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

Tamil nadu
By Swetha Subash Jun 07, 2022 06:04 AM GMT
Swetha Subash

Swetha Subash

in கல்வி
Report

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மழலையர் வகுப்புகள்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த 2018-ம் ஆண்டு, அதிமுக ஆட்சியில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு! | Lkg Ukg Classes To Be Shut In Tamil Nadu

கடந்த 2018-ல் 2,381 அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. தொடக்கக் கல்வித் துறையிலிருந்து ஆசிரியர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு பெற்றோர் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பு இருந்ததன் காரணமாக தமிழகம் முழுவதும் எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் சேர்ந்தனர்.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்பட உள்ளதாக தற்போது பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த வகுப்புகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு! | Lkg Ukg Classes To Be Shut In Tamil Nadu

மேலும், அங்கன்வாடிகளில் நடத்தப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறையும் சூழல் உருவாகியுள்ளது.    

அதிமுக - பாஜக இடையே விரிசல் இல்லை - எடப்பாடி பழனிசாமி