9-ம் வகுப்புக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

By Swetha Subash May 31, 2022 06:44 AM GMT
Swetha Subash

Swetha Subash

in கல்வி
Report

வரும் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்விக்கான பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மத்திய அரசின் நிதியில் கற்றுத்தரப்படும் ஃபேஷன் டெக்னாலஜி,டெய்லரிங், டிசைனிங் உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

9-ம் வகுப்புக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! | Vocational Class Syllabus For 9Th Grade Cancelled

எனினும், நடப்பு கல்வியாண்டில் 9-ம் வகுப்பு முடித்து 10-ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும் எனவும், வரும் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 5 பாடங்கள் மட்டுமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.