குருதி கொடையளித்து மனித உயிர் காப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Twitter M K Stalin DMK
By Sumathi Jun 14, 2022 08:39 AM GMT
Report

விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளின்போது பிறர் உயிர் காக்க குருதி கொடையளிப்போரின் நல்லுள்ளம் போற்றுவோம் என உலக ரத்த தான தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

உலக இரத்த தான தினம்

உலகம் முழுவதும் ஜூன் 14 அன்று உலக இரத்த தான தினம் அனுசரிக்கப்படுகிறது. ஏ.பி.ஓ ரத்த குரூப் முறையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஜூன் 14 அன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

குருதி கொடையளித்து மனித உயிர் காப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Save Human Lives By Donating Blood Cm Mk Stalin

இரத்த தானம் செய்வதன் அவசியம் மற்றும் பாதுகாப்பாக தானம் செய்வதன் முக்கியத்துவத்தை குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம் ஆகும்.

மு.க.ஸ்டாலின் டுவிட்

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில், விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளின்போது பிறர் உயிர் காக்க குருதி கொடையளிப்போரின் நல்லுள்ளம் போற்றுவோம்!

சாதி - மதம் - நிறம் - பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை! குருதிக் கொடையளித்து மனித உயிர் காப்போம்! மானுடம் தழைக்கச் செய்வோம் என பதிவிட்டுள்ளார். 

விதிகளை மீறி முதலீடு - அமேசான் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம்!