கடலில் மூழ்கியவர்களை காப்பாற்றும் திட்டம் - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கடலில் மூழ்கியவர்களை காப்பாற்றும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
கடலூர் ஆற்றுத் தடுப்பணை
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் போலீஸ் சரகம் கீழ் அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆற்று குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் அந்தப் பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் தடுப்பணையில் குளிக்கச் சென்றனர்.
7 பேர் உயிரிழப்பு
குளித்துக் கொண்டிருக்கும்போது, ஆழமான பகுதியில் இவர்கள் இறங்கிவிட்டனர். இதனையடுத்து, இவர்கள் நீரில் தத்தளித்து கத்தி கூச்சலிட்டனர்.
இவர்களின் சத்தம் கேட்டு, கிராம மக்கள் ஓடி வந்து ஆற்றில் மூழ்கிய 7 பேரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், இவர்கள் 7 பேரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ரூ.5 லட்சம் நிதியுதவி
ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
முதலமைச்சர் வேண்டுகோள்
ஆறு, கடல், குளங்களில் குளிப்பவர்கள் மிகவும் கவனமுடன் குளிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
காப்பாற்றும் திட்டம்
இந்நிலையில், கடலில் மூழ்கி தவிப்பவர்களை காப்பாற்றும் மீட்பு பயிற்சி திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அதில், 14 மாவட்ட கடலோர மீனவ இளைஞர்களுக்கான திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.#CMMKSTALIN #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @thamoanbarasan pic.twitter.com/8sfIoAITks
— TN DIPR (@TNDIPRNEWS) June 7, 2022