விதிகளை மீறி முதலீடு - அமேசான் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம்!
அமேசான் நிறுவனத்திற்கு 200 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
அமேசான்
அமேசான் நிறுவனம் சில்லறை விற்பனைக்காக ப்யூச்சா் கூப்பன்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் 49 விழுக்காடு பங்குகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்த ஒப்பந்தத்தின்போது அமேசான் நிறுவனம் சில தகவல்களை மறைத்து, இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு மற்றும் அந்நிய செலாவணி சட்டங்களை மீறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஃப்யூச்சா் கூப்பன்ஸ் நிறுவனம், இந்திய போட்டி ஆணையத்திடம்(சிசிஐ) புகாா் அளித்தது.
202 கோடி ரூபாய் அபராதம்
இந்தப் புகாரை கடந்த ஆண்டு டிசம்பரில் விசாரித்த சிசிஐ, விதிமுறைகளை அமேசான் நிறுவனம் மீறியுள்ளதால், அந்நிறுவனம் 202 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும் ஒப்பந்தத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.இதை எதிர்த்து அமேசான் நிறுவனம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.வேணுகோபால் மற்றும் அசோக்குமார் மிஸ்ரா அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
அதில், அமேசான் நிறுவனம் 200 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த வேண்டும் என சிசிஐ பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் உறுதி செய்தனர். இந்தத் தொகையை அமேசான் நிறுவனம் 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
புடினுடன் டாய்லெட்டுக்கு சென்ற 6 பேர்..நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!