தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க 100 மில்லியன் டாலர்.. சவுதி இளவரசரின் வினோத திட்டம் - மிரண்ட வல்லுநர்கள்!
சவுதியில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க வித்தியாசமான முறையைக் கையாண்டுள்ளது.
சவுதி
பருவநிலை மாற்றத்தால் மழையின் அளவு குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் தண்ணீர் பஞ்சம் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாகச் சவுதியில் சொல்லவே தேவை இல்லை. 1970களில் சவுதியில் குடிநீர் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனை சமாளிக்கச் சவுதி இளவரசர் முகமது அல்-ஃபைசல் ஒரு வினோத திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார். அண்டார்டிக்காவில் இருந்து ஒரு மிகப் பெரிய பனிப்பாறையைச் சிறு படகு மற்றும் கப்பல்கள் மூலம் இழுத்து வருவதே அவரது திட்டமாகும். பிளாஸ்டிக் மற்றும் பாய்மரத்துணி மூலம் அதைப் போர்த்தினால் பனிப்பாறை மெதுவாக உருகும்.
சிறு படகு மற்றும் கப்பல்கள் மூலம் இழுத்து வருவதே நாட்டின் தண்ணீர் தேவைக்குத் தீர்வாக இருக்கும் என எண்ணினார். இந்த திட்டத்தைச் செயல்படுத்த 100 மில்லியன் டாலர் வரை செலவாகும். அதுமட்டுமில்லாமல் அண்டார்டிக்காவில் இருந்து பனிப்பாறையை எடுத்து வர எட்டு மாதங்கள் ஆகும்.
வித்தியாசமான முறை
மேலும் இது குறித்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களைக் கொண்டு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இது மிகப் பெரிய சிந்தனையாக இருந்தாலும், அது ஒரு போதும் நடைமுறைக்கு வரவில்லை.
அந்த காலத்தில் தொழில்நுட்பம் பெரியளவில் வளராததாலும் அதீத செலவு காரணமாகவும் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு சவுதியில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்த நிலையில், இளவரசர் அப்துல்லா அல்ஷேஹி முன்னிலையில் அண்டார்டிக்காவில் இருந்து பனிப்பாறையை இழுத்து வரத் திட்டமிட்டுக் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.