2050ல் அதிக முஸ்லிம்களை கொண்ட நாடாக இந்தியா மாறும் - எப்படி தெரியுமா? இதை பாருங்க!
அதிக முஸ்லிம்களைக் கொண்ட நாடாக இந்தியா 2050ல் மாறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா
இந்தியாவில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம், சீக்கியம் உள்ளிட்ட பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி , இந்தியாவின் மக்கள் தொகையில் 79.8% இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள்.
14.2% இஸ்லாத்தைப் பின்பற்றுகிறார்கள்.2.3% கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள். 1.7% சீக்கிய மதத்தைப் பின்பற்றுகிறார்கள். 0.7% பௌத்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள், 0.37% சமண மதத்தைப் பின்பற்றுகிறார்கள்.
இந்த நிலையில், 2050ல் எந்த நாட்டில் அதிக முஸ்லிம் மக்கள் தொகை இருக்கும் என்று பியூ ஆராய்ச்சி மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,அதிக 273 மில்லியன் முஸ்லிம்களைக் கொண்ட நாடாகப் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆய்வறிக்கை
மூன்றாவது இடத்தில் 257 மில்லியன் இந்தோனேசியா செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து 2050ல் அதிக 31 கோடி முஸ்லிம்களைக் கொண்ட நாடாக மாறும் இந்தியா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பியூ ஆராய்ச்சி மையத்தின் ஆய்வில் வளர்ந்து வரும் முஸ்லீம் மக்கள் தொகைக்கு பெரும்பாலும் இளம் வயது மற்றும் அதிக கருவுறுதல் விகிதமே காரணம் என்று தெரியவந்துள்ளது. மேலும் உலக மக்கள் தொகைவிட முஸ்லீம் மக்கள் தொகை வேகமாக வளரும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.