மெக்கா புனித பயணம் செல்லும் இந்தியர்களுக்கு..சவுதி அரசின் உத்தரவு!
இந்தியாவின் தேசிய கொடியின் நிறங்களை பறைசாற்றும் வகையில் சவுதி அரசு வழிவகை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மெக்கா
முஸ்லிம்களின் முக்கிய புனித தலமான மெக்காவிற்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அங்கு மினாவில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்கி வழிபாடு நடத்துவர் பின்னர் அங்கிருந்து அரஃபா மைதானம் சென்று பிரார்த்தனையில் ஈடுபடுவர்.
அந்த வகையில் இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றார்கள்.அதுமட்டுமில்லாமல் இந்திய அரசு சார்பில் ஆண்டு தோறும் மக்கள் மெக்கா புனித பயணத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சவுதி அரேபியா
மேலும் புனித பயணம் மேற்கொண்டுள்ள முஸ்லிம்களுக்கு தேவையான வசதிகளை அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது அதன் ஒருபகுதியாக இந்தியாவிலிருந்து மெக்காவுக்கு வருகை தரும் மக்களுக்கு,இந்தியாவின் கொடியை பயன்படுத்தி புதுவித நடவடிக்கையை சவுதி அரசு மேற்கொண்டுள்ளது.
சவுதி அரேபியா மெக்காவில் கடுமையான வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது . இதனால் மக்களுக்கு சோர்வடையாமல் இருக்க குடை வழங்கப்பட்டுள்ளது . அதில் இந்தியாவின் தேசிய கொடியின் நிறங்களை கொண்டு குடை செய்யப்பட்டுள்ளது .
இது குறித்து சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளதாவது : இந்தியாவின் கொடி கலரை சவுதி அரேபியாவில் பறைசாற்றும் வகையில் வழிவகை சவுதி அரசு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.