புனித ஹஜ் பயணம்..மக்காவில் ஒரே நேரத்தில் கூடிய 1 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள்..!
உலகம் முழுவதும் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் மக்காவிற்கு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பக்ரீத் பண்டிகை
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் பண்டிகை. இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு மக்காவிற்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள்.
இதையடுத்து உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் மக்காவிற்கு சென்றுள்ள நிலையில் அவர்கள் அங்கு மினாவில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்கி வழிபாடு நடத்துவர் பின்னர் அங்கிருந்து நாளை அரஃபா மைதானம் சென்று பிரார்த்தனையில் ஈடுபடுவர்.
புனித ஹஜ் பயணம்
இந்த நிலையில் இந்தாண்டு சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புனித பயணம் மேற்கொண்டுள்ள முஸ்லிம்களுக்கு தேவையான வசதிகளை அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் மற்றும் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.