லைலத்துல் கத்ர் இரவு..மக்காவை சுற்றி திரண்ட 1.4 மில்லியன் முஸ்லிம்கள் - ஸ்தம்பித்த சாலைகள்..!
லைலத்துல் கத்ர் இரவை அடுத்து மக்கா நகர் முழுவதும் 1.4 மில்லியன் இஸ்லாமியர்கள் திரண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
லைலத்துல் கத்ர் இரவு
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து இரவு முழுவதும் நின்று வணங்கி இறைவனுக்கு நன்றி செலுத்துவார்கள்.
இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களான புனித நுாலான குர்ஆனை இறைவன் இறக்கினான். ரமலான் மாத்தின் ஒற்றை படை இரவுகளான 21,23,25,27,29 ஆகிய இரவுகளில் லைலத்துல் கத்ர் என்ற புனித இரவை தேடி கொள்ளுங்கள் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அறிவித்து இருந்தார்கள்.
மேலும் குர்ஆனில் இறைவன் லைலத்துல் கத்ர் இரவில் தான் குர் ஆன் அருளப்பட்டது. இந்த இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆண்டு தோறும் இஸ்லாமியர்கள் ரமலான் மாதங்களில் குறிப்பாக கடைசி 10 நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் அதிகம் இறைவனுக்கு நன்றி செலுத்தி வருகின்றனர்.
1.4 மில்லியன் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
அந்த வகையில் 27வது இரவான நேற்று இஸ்லாமியர்களின் புனித தளமான மக்காவில் சுமார் 1.4 மில்லியன் மக்கள் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகையை தொழுதனர்.
இதனால் மக்காவை சுற்றியுள்ள சாலைகள் முழுவதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தொழுகையில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதே போன்று மதினாவிலும் இஸ்லாமியர்கள் 1 மில்லியன் பேர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.