மாணவி சத்யா கொலை வழக்கு - சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடக்கம்
மாணவி சத்யாவை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கல்லுாரி மாணவி கொலை
சென்னையில் உள்ள கிண்டி ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி. இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், ராமலட்சுமியின் மகளான கல்லூரி மாணவி சத்யா (வயது 20), பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் கல்லூரிக்கு செல்ல ரயில் நிலையத்தில் காத்திருந்த போது,
மாணவியின் பகுதியில் காவலராக பணியாற்றி ஓய்வுபெற்ற தயாளன் என்பவரின் மகன் சதீஷ் கல்லூரி மாணவி சத்யாவை காதலிக்க வற்புறுத்தியுள்ளான்.
அதற்கு சத்யா காதலை ஏற்க மறுத்த நிலைியல் ரயில் வருவதை அறிந்து தண்டவாளத்தில் தள்ளியுள்ளான் அப்போது மின்சார ரயில் சத்யா மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் பாகங்கள் சிதறி உயிரிழந்தார்.
இதையடுத்து மாணவியை தள்ளி கொலை செய்து விட்டு தலைமறைவான சதீஷை போலீசார் துரைப்பாக்கத்தில் வைத்து கைது செய்தனர்.
இந்த நிலையில் மகள் சத்யா இறந்த செய்தி அறிந்து தந்தை மாணிக்கம் மயில் துத்தம் என்ற விஷத்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
சிபிசிஐடி போலீசார் விசாரணை
இச்சம்பவம் தொடர்பாக சதீஷை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். நீதிபதி அக்.28ம் தேதி வரை போலீஸ் காவலில் அடைக்க உத்தரவிட்டனர்.
மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி உத்தரவிட்டார் டிஜிபி சைலேந்திர பாபு.இதையடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பரங்கிமலை ரயில் நிலையம் மற்றும் ஆலந்துார் குடியிருப்புக்கு சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டிஎஸ்பி செல்வகுமார் தலைமையில் காவல் ஆய்வாளர் ரம்யா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்துகின்றனர்.