36 மணி நேரத்தில் 15 கொலைகள் ? டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்

Tamil nadu
By Irumporai Aug 25, 2022 04:02 AM GMT
Report

 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியானதற்கு டிஜிபி சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார்.

36 மணி நேரத்தில் 15 படுகொலைகள்

தமிழகத்தில் 36 மணி நேரத்தில் 15 படுகொலைகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டார், இதற்கு விளக்கமளித்து டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் :

கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகச் செய்திகளில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 22-08-2022 அன்று 7 கொலைகளும், 23-08-2022 அன்று 5 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது.

சைலேந்திரபாபு விளக்கம்

36 மணி நேரத்தில் 15 கொலைகள் ? டிஜிபி சைலேந்திர பாபு  விளக்கம் | 5 Murders Dgp Sylendra Babu Explained

சில ஊடகங்களில் பட்டியலிடப்பட்ட பல்வேறு கொலை வழக்குகள் ஆகஸ்ட் மாதத்தில் முந்திய நாட்களில் நடைபெற்றவை. மேலும், பெரும்பாலான கொலை சம்பவங்கள் குடும்ப உறுப்பினர்கள் , தனி நபர்களிடையே முன் விரோதம் காரணமாக நடந்துள்ளது.

36 மணி நேரத்தில் 15 கொலைகள் ? டிஜிபி சைலேந்திர பாபு  விளக்கம் | 5 Murders Dgp Sylendra Babu Explained

2022-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 940 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 2021-ல் இதே காலக்கட்டத்தில் 925 கொலைகளும், 2019-ம் ஆண்டு 1041 கொலைகளும் நிகழ்ந்துள்ளது.

ஆகவே, முந்தைய 2019-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு 101 கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.