மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தது ஏன் - சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்

Chennai Tamil Nadu Police
By Thahir Oct 14, 2022 06:11 AM GMT
Report

ரயில் முன் தள்ளி கல்லுாரி மாணவி கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் பரபரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளான்.

மாணவி கொலை 

சென்னையில் உள்ள கிண்டி ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி. இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

இவரின் குடும்பத்தினர் காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். ராமலட்சுமியின் மகளான கல்லூரி மாணவி சத்யா (வயது 20), நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் கல்லூரிக்கு செல்ல வருகை தந்துள்ளார்.

அப்போது, நடைமேடை எண் 1ல் மாணவியுடன் ஒருவன் நின்று பேசிக்கொண்டு இருந்த நிலையில், மெரினா கடற்கரை நோக்கி பயணம் செய்த மின்சார ரயில் வரும்போது மாணவியை ரயிலுக்குள் தள்ளிவிட்டு தப்பி சென்றான்.

why did you kill the student sathish confession

இந்த  சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மாம்பலம் காவல் துறையினர், சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இளைஞர் கைது 

மேலும், இதுகுறித்து 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்தனர். அப்போது, அதே பகுதியில் காவலராக பணியாற்றி ஓய்வுபெற்ற தயாளன் என்பவரின் மகன் சதீஷ் கல்லூரி மாணவி சத்யாவை ஒருதலையாக காதலித்து வந்தது அம்பலமானது.

கயவனின் காதலனை மாணவி ஏற்றுக்கொள்ளாத நிலையில், தொல்லைகள் தொடர்ந்ததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு எழுதியும் வாங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாணவிக்கு தொடர்ச்சியாக காதல் தொல்லை கொடுத்து வந்த சதீஷ், சம்பவத்தன்று மாணவியிடம் மீண்டும் காதலிக்க சொல்லி வற்புறுத்தி இருக்கிறான். அதனை ஏற்க மறுத்த மாணவி ரயில் முன் தள்ளி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் மாணவியின் உடல் நசுங்கி, தலை துண்டிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். தப்பியோடிய சதீஷை தனிப்படை காவல் துறையினர் நள்ளிரவு நேரத்தில் அதிரடியாக கைது செய்தனர்.

பரபரப்பு வாக்குமூலம் 

இந்த விவகாரத்தில் மாணவியின் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகி இருக்கிறார். மகளின் இறப்பு செய்தியை கேட்ட மாணவியின் தந்தை மாணிக்கமும் மாரடைப்பால் உயிரிழந்தார் என்று தகவல் வெளியானது.

why did you kill the student sathish confession

இந்த நிலையில் அவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு தலை காதலனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தனக்கு கிடைக்காத சத்யா யாருக்கும் கிடைக்கக்கூடாது என கொலை செய்ததாக சதிஷ் வாக்குமூலம் அளித்துள்ளான்.

why did you kill the student sathish confession

சத்யாவை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்யும் எண்ணத்திலே வந்ததாகவும்; பொதுமக்கள் சூழ்ந்ததால் தப்பியோடியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளான்.