அடுத்த சென்னை மேயர் பதவி சத்யராஜ் மகளுக்குத்தான்? வலம் வரும் போஸ்ட்டுகள்!
திவ்யா சத்யராஜ் சென்னை மேயர் பதவிக்கு முயற்சி செய்துவருவதாக விவாதங்கள் எழுந்துள்ளன.
திவ்யா சத்யராஜ்
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து பற்றிய முதுகலை தத்துவத்தில் பட்டம் பெற்றார். அரசின் பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான அக்ஷய பாத்ரா அறக்கட்டளையின் (TAPF) நல்லெண்ணத் தூதராக பணியாற்றி வருகிறார்.
2020ல் மகிழ்மதி இயக்கம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இது ஊட்டச்சத்து குறைபாடுள்ள மற்றும் வசதியற்ற சமூகங்களுக்கு உதவக்கூடிய அமைப்பு.
அடுத்த மேயர்?
மருத்துவத் துறையில் உள்ள முறைகேடுகள் மற்றும் அலட்சியத்தை சுட்டிக்காட்டி, நீட் தேர்வுகள் குறித்து கேள்வி எழுப்பி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Join panni 2days than aaguthu athukulla mayor post-ku paid promotion 😂😂. Akkov @PriyarajanDMK you are in danger.#DMK #DMKFailsTN #DivyaSathyaRaj pic.twitter.com/cMqURZi4r3
— Sathish VJ ✨💫 (@S_A_T_H_I_S) January 22, 2025
இந்நிலையில், இப்போது மேயர் ப்ரியா ஆர்.. எதிர்காலத்தில் மேயர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் என்ற இன்ஸ்டா போஸ்ட்டுக்கு திவ்யா லைக் செய்துள்ளார்.
மேலும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இவ்வாறான பதிவுகள் அதிகமாக வலம் வந்த வண்ணம் உள்ளது. எனவே எதிர்காலத்தில் மேயர் பதவிக்கு திவ்யா முயற்சிக்கிறாரா? என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.