சனாதன சர்ச்சை: என்ன தகுதி இருக்கு? மத வெறிதான் ; கஸ்தூரியை விளாசிய சத்யராஜ் மகள்!
நடிகை கஸ்தூரியின் சனாதனம் குறித்த பேச்சுக்கு திவ்யா சத்யராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
சனாதன சர்ச்சை
சனாதனத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. இதற்கு எதிராக பேசிய கஸ்தூரி, “டெங்கு, மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றியுள்ளது.

அவர்களை என்ன பண்ணுறதா உத்தேசம்? ஊருக்குத்தான் உபதேசம் இவர்களுக்கு இல்லை. சனாதனத்தின் மேல் அவ்வளவு வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்த கோவில் சொத்து மட்டும் கேட்குதோ? முதல்ல உண்டியலிலிருந்து கைய எடுங்க” எனத் தெரிவித்திருந்தார்.
திவ்யா சத்யராஜ் பதிலடி
இந்நிலையில், திவ்யா சத்யராஜ் “கஸ்தூரி, அமைச்சர் உதயநிதியையும் அவர் பேசிய சனாதனத்தையும் பேச என்ன தகுதி இருக்கிறது. இவர் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டு எது? இவர் பேசிய பேச்சு முழுமையாக ஒரு மத வெறியர் போல் தெரிகிறது. இந்த பிற்போக்கான செயல் பெண்களுக்கு இவர் செய்யும் துரோகம்.

சனாதனத்தால் பெண் உரிமை பறிக்கப்படுகிறது. ஒருவரை உயர்ந்தவர் மற்றொருவர் தாழ்ந்தவர் என்பதை கட்டமைத்த இந்த பாகுபாடுதான் சனாதனம். ஆகையால் சமத்துவத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் எதிரான இந்த சனாதனத்தை நான் முழுமையாக எதிர்க்கிறேன். கஸ்தூரி பேசிய பேச்சு முற்றிலும் தவறானது.
நீதியின் பக்கம் நிற்க வேண்டுமே தவிர சாதியின் பக்கம் அல்ல. அவர் இதுபோன்று பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இந்தியாவில் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். அரசு நிறுவனத்துடன் கைகோர்த்து சமூக சேவைகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
என்.பி.பி தரப்பால் தடுக்கப்படும் வலி. வடக்கு அபிவிருத்தி! தவிசாளர் சுகிர்தன் குற்றச்சாட்டு IBC Tamil
உக்ரைனுக்கு உதவும் ஸ்டார்லிங்க்: செயற்கைக் கோள்களை குறிவைத்து ரஷ்யாவின் பாரிய ஆயுத திட்டம் IBC Tamil