கற்பை காக்கவே பெண்கள் உடன்கட்டை ஏறினாங்க; ஆனால், சனாதனம்.. அண்ணாமலை என்ன சொல்றார் பாருங்க
உடன்கட்டை ஏறுதல் குறித்த விளக்கத்தை அண்ணாமலை அளித்துள்ளார்.
அண்ணாமலை
உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்து இந்தியா முழுவதும் விவாதமாக வெடித்துள்ளது. சனாதனத்தை ஒழிப்போம் என கூறியதால், அவருக்கு எதிராக பலர் கண்டனங்கள், மிரட்டல்கள், புகார்கள் என அளித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும் என்று அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.
உடன்கட்டை ஏறுதல்
அப்போது பேசிய அவர், ஆதிகாலத்தில் இங்கிருந்தவர்கள் எல்லோருமே சனாதன தர்மத்தைப் பின்பற்றியவர்கள். அந்நிய படையெடுப்பில் ராஜாவோ, வீரனோ கொல்லப்பட்ட பிறகு, அவர்களின் மனைவிகளையும், தங்கைகளையும், தாய்மார்களையும் ஒரு பரிசுப் பொருளாக வெள்ளையர்கள் எடுத்துச் செல்ல ஆரம்பித்தனர்.
அதனால்தான் போரில் தன் கணவன் இறக்கும்போது, கணவனோடு அந்தப் பெண் உடன்கட்டை ஏற ஆரம்பித்தார். இது சனாதன தர்மத்தில் வரவில்லை. இது பெண்ணின் கற்பைக் காப்பாற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை எந்தக் கோட்பாடும் கிடையாது.
இப்படித்தான் இருக்க வேண்டும் என்கின்ற அறிவுரையும் கிடையாது. யார் வேண்டுமானாலும் இயற்கையின் நியதிகளுக்கு உட்பட்டு வாழ்க்கையை வாழலாம் என்பது சனாதன தர்மம் எனத் தெரிவித்துள்ளார்.