மோடி பயோபிக்; இவர்கள் எடுத்தால் நல்லா இருக்கும் - சத்யராஜ் பளீச்!
மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்து சத்யராஜ் பேசியுள்ளார்.
நடிகர் சத்யராஜ்
’மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது சத்யராஜ் பேசினார். அப்போது, ’கூலி’ படத்தில் நான் நடிக்கிறேன் என்பது உறுதி செய்கிறேன்.
சல்மான் கான் படத்தில் நடிக்கிறேனா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஒப்பந்தப்படி இந்த படத்தில் நடிப்பவர்களின் விவரங்களை தயாரிப்பு நிறுவனம் தான் சொல்ல வேண்டும்.
மோடி பயோபிக்
அதனால் நான் முந்திரி கொட்டை மாதிரி சொன்னால் என் மீது கேஸ் போட்டு விடுவார்கள் எனத் தெரிவித்தார். அதன்பின், பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதற்கு தன்னிடம் யாரும் இதுவரை அணுகவில்லை.
அதே நேரத்தில் மோடி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எனது நண்பர் மணிவண்ணன் போன்றவர்கள் இயக்கினால் உண்மையாக நன்றாக இருக்கும்.
மேலும் இந்த படத்தை விஜய் மில்டன், வெற்றிமாறன், பா ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்கள் இயக்கினால் நன்றாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.