கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்யக்கூடாது - நீதிமன்றத்தை நாடும் செல்வபெருந்தகை
கன்னியாகுமரியில் மோடியின் தியானம் குறித்து செல்வபெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.
மோடி தியானம்
ஜுன் 4ல் நாடு முழுவதும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. இந்நிலையில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடிக்கும் வகையில் பிரமதர் மோடி தமிழகம் வருகை தரவுள்ளார்.
மேலும், கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு பாறைக்கு சென்று தியானம் மேற்கொள்ளவுள்ளார். இதனையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தற்போது காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில், மே 30 முதல் ஜூன் 1 வரை நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது.
செல்வபெருந்தகை குற்றச்சாட்டு
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது. வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் நாளை கடிதம் கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்’’ என இந்திய தேர்தல் ஆணையத்தை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.