400 இடங்களை விரும்புவது எதற்காக தெரியுமா..? பட்டியலிட்ட பிரதமர் மோடி!

BJP Narendra Modi India Madhya Pradesh Lok Sabha Election 2024
By Jiyath May 07, 2024 05:05 PM GMT
Report

400 இடங்களை விரும்புவது ஏன்? என்பது குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி

மத்திய பிரதேச மாநிலம் தார் என்ற பகுதியில் பாஜக தேர்தல் பேரணி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது "அம்பேத்கரை காங்கிரஸ் குடும்பத்தினர் மிகவும் வெறுக்கின்றனர் என்பதுதான் உண்மை.

400 இடங்களை விரும்புவது எதற்காக தெரியுமா..? பட்டியலிட்ட பிரதமர் மோடி! | Why 400 Seats Pm Narendra Modi Explanation

பாஜக 400 இடங்களை பெற்றால், பிரதமர் மோடி அரசியலமைப்பை மாற்றிவிடுவார் என காங்கிரஸ் வதந்தியை பரப்பு வருகிறது. பாஜக தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத்தில் ஏற்கனவே 400 இடங்ளுக்கு மேல் பெற்றுள்ளது.

நாங்கள் அதை ஜம்மு-காஷ்மீர் மாநலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறந்த அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்காக பயன்படுத்தினோம் என்பதை மக்கள் புரிந்து கொள்வது முக்கியமானது.

லட்சாதிபதியாகும் கோடிக்கணக்கான மக்கள் - ராகுல் காந்தியின் பிளான் இதுதான்!

லட்சாதிபதியாகும் கோடிக்கணக்கான மக்கள் - ராகுல் காந்தியின் பிளான் இதுதான்!

எதற்காக விரும்புகிறேன்?       

காங்கிரஸ் மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ கொண்டு வரக்கூடாது என்பதில் மோடி 400 இடங்களை விரும்புகிறார். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பாப்ரி லாக் போட்டுவிடக்கூடாது என்பதற்காக மோடி 400 இடங்களை விரும்புகிறார்.

400 இடங்களை விரும்புவது எதற்காக தெரியுமா..? பட்டியலிட்ட பிரதமர் மோடி! | Why 400 Seats Pm Narendra Modi Explanation

ஓபிசி இடஒதுக்கீட்டை அவர்களது வாக்கு வங்கிக்கு அளிப்பதை தடுத்த மோடி 400 இடங்களை விரும்புகிறார். எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை கடந்த ஆண்டுகளாக நீட்டிக்க 400-க்கும் அதிகமான இடங்களை பயன்படுத்தியுள்ளோம்.

பழங்குடியின பெண்ணை நாட்டின் ஜனாதிபதியாக நியமனம் செய்ய, பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பயன்படுத்தியுள்ளோம். மோடி 400 இடங்களை கேட்பது நாட்டின் காலி இடங்களை, தீவுகளை மற்ற நாடுகளுக்கு காங்கிரஸ் அளித்து விடக்கூடாது என்பதற்காகத்தான்" என்று தெரிவித்துள்ளார்.