என்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை..கமல் குறித்து ஸ்ருதிஹாசன் தாய் தகவல்!

Kamal Haasan Tamil Cinema Bollywood
By Sumathi Jan 07, 2024 02:30 PM GMT
Report

நடிகர் கமல் குறித்து அவரது முன்னாள் மனைவி பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

நடிகர் கமல் 

உலகநாயகன் கமலஹாசனின் முன்னாள் மனைவியான சரிகாவிற்கு பிறந்தவர் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்.

kamal hassan with sarika

தொடர்ந்து, பாலிவுட்டில் கதாநாயகியாகவும், சில படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் வலம் வந்தார். அதன்பின், 1988ல் கமலை திருமணம் செய்துக்கொண்டார். இருவரும் 2004ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

அதற்கு காரணமே கமல் தான் - ரகசியம் பகிர்ந்த நடிகை அபிராமி!

அதற்கு காரணமே கமல் தான் - ரகசியம் பகிர்ந்த நடிகை அபிராமி!

 சரிகா பேட்டி

இந்நிலையில் சமீபத்தில் சில தினங்களாக கமலஹாசன் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் காதல் குறித்த தகவல் தான் இணையத்தில் பரவி வந்தது. அதனைத்தொடர்ந்து, அவரது முன்னாள் மனைவி முன்னதாக அளித்துள்ள பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

என்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை..கமல் குறித்து ஸ்ருதிஹாசன் தாய் தகவல்! | Sarika Thakur About Kamal Hassan

அதில், உச்சகட்ட நடிகையாக இருக்கும் போது தான் கமலை திருமணம் செய்து கொண்டேன். அவர் என்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை விரும்பியது அவரது சுதந்திரம். எனவே அதைப் பற்றி எனக்கு எந்த விதமான வருத்தமும் இல்லை. மேலும் எத்தனை வாய்ப்புகள் கிடைத்தாலும் எனது வாழ்க்கையை இப்படியே தொடரத்தான் நான் இப்போது விரும்புகிறேன்.

இந்த வாழ்க்கை தான் எனக்கு பிடித்திருக்கிறது. அழகான இரண்டு பெண் குழந்தைகள் அன்போடு தன்னோடு இருப்பதால் எனக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.