அதற்கு காரணமே கமல் தான் - ரகசியம் பகிர்ந்த நடிகை அபிராமி!
தன் பெயர் மாறியதற்கு கமல் ஹாசன் தான் காரணம் என அபிராமி தெரிவித்துள்ளார்.
நடிகை அபிராமி
குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அபிராமி. பின், அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘வானவில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலெடி எடுத்துவைத்தார்.

தொடர்ந்து, கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனையடுத்து, மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் ஆகிய பல படங்களில் நடித்தார்.
பெயர் மாற்றம்
இந்நிலையில், இவர் அளித்த பேட்டி ஒன்றில் கமல் ஹாசனின் ரசிகனாக இருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. ஏனென்றால் எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் கமல் சாரின் ரசிகர்கள்.

குணா படம் ரிலீஸ் ஆன பிறகு என் உறவினர்கள் எல்லாரும் எனக்கு அபிராமி என்று பெயர் வைக்க வேண்டும் என அம்மாவிடம் சொல்வார்கள். பிறகு, நான் ஆங்கரிங் பொசிஷனுக்கு வந்ததும், என் பெயரை மாற்ற வேண்டுமா என்று கேட்டார்கள்.
அப்போது தான் அபிராமி என்று பெயர் மாற்றப்பட்டது. கமல் சாரின் திரைப்படங்களை விட அவரது வாழ்க்கைத் தத்துவம் எனக்கு மிகவும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
அபிராமி 2009ல் ராகுல் பவன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இருவருக்கும் குழந்தைகள் இல்லை என்பதால் சமீபத்தில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil