சில்க்குடன் அந்த பாட்டு எடுத்தப்போ..? போட்டுடைத்த கமல் !!
சில்க் ஸ்மிதா மறைந்த பல ஆண்டுகள் கடந்த பின்பும் அவரின் மீதான கவனம் இன்னும் சினிமாவில் இருந்து மறையவில்லை.
சில்க் ஸ்மிதா
கவர்ச்சி நடிகையாக திரைப்படங்களில் தோன்றிய சில்க் ஸ்மிதா தென்னிந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். பல படங்களில் அவரை வைத்து ரசிகர்களை திரையரங்கிற்கு வர வைத்த யுக்தி அப்போது பெரும்பாலும் பயன்பட்டது.
1979 -ஆம் ஆண்டு திரை துறையில் அறிமுகமான சில்க் ஸ்மிதா, கடந்த 1996-ஆம் ஆண்டில் தனது 36 வயதில் தற்கொலை செய்து கொண்டார். 27 ஆண்டுகள் நிறைவடைந்த பின்பும் அவர் மீதான கவனம் இன்னும் திரைத்துறையில் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.
கமல் பேட்டி
அவர் குறித்து நடிகர் கமல் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த பேட்டியில், “ சில்க் ஸ்மிதாவிற்கு பெரிதாக நடனமாடத் தெரியாது, அவருக்கு நடனத்தை பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டர் தான் சில்க்கால் என்ன செய்ய முடியுமோ அதை இணைத்துக் நடனம் அமைத்திருந்தார்.
கமல்ஹாசன் நினைவு கூர்ந்தார், “கிராமத்தைச் சேர்ந்த என்றாலும், சில்க் ஸ்மிதாவிற்கு வியக்க வைக்கும் ஃபேஷன் உணர்வு இருந்தது என குறிப்பிட்ட கமல், பேஷன் பத்திரிக்கைகளைப் சில்க் படித்துக்கொண்டே இருந்தார் என்றார்.
சரியாக சமைக்க தெரியாது என்றாலும் பாலு(பாலு மகேந்திரா)விற்கும் தனக்கும் அவரே சமைக்க வேண்டும் என்று வற்புறுத்துவார் என பழைய நினைவுகளை கூர்ந்த கமல், அவளால் சத்மா(மூன்றாம் பிறை படத்தின் ஹிந்தி ரீமேக்)கிற்கு பிறகு தானும் பெரிதாக அவருடன் தொடர்பை இழந்தேன் எனக் கூறினார்.