ராதிகாவுக்கும் வரலெட்சுமிக்கும் தான் பிரச்சனை; ஆனால் முதல் மனைவி - ரகசியம் பகிர்ந்த சரத்குமார்!

Sarathkumar Raadhika Varalaxmi Sarathkumar Tamil Cinema
By Sumathi Jan 23, 2024 02:30 PM GMT
Report

தனது முதல் மனைவி மற்றும் விவாகரத்து குறித்து நடிகர் சரத்குமார் மனம் திறந்துள்ளார்.

நடிகர் சரத்குமார்

நடிகர், அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர் என பன் முகங்களை கொண்டவர் சரத்குமார். 1984ல் சாயாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என 2 மகள்கள் உள்ளனர்.

sarathkumar family

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அதனையடுத்து, நடிகை ராதிகாவை 2001ல் திருமணம் செய்துக்கொண்டார். தற்போது, பிஸியாக நடித்துவரும் சரத்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில், உண்மையில் கடவுள் எங்கள் குடும்பத்தின் மீது கருணையாக இருக்கிறார்.

சரத்குமார் நடிக்கவே அனுமதிக்கல.. சிம்புவுக்கு மட்டும் ஓகே சொன்னது - ஏன்? வரலட்சுமி ஓபன் டாக்

சரத்குமார் நடிக்கவே அனுமதிக்கல.. சிம்புவுக்கு மட்டும் ஓகே சொன்னது - ஏன்? வரலட்சுமி ஓபன் டாக்

விவாகரத்து

வரலட்சுமி அம்மாவை நான் விவாகரத்து செய்த போதும் அவர் எங்களுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். அதே போல என் மகள் வரலட்சுமியை, நீ உன் அப்பாவிடம் பேசக்கூடாது, அவர் வீட்டுக்குபோகக்கூடாது என்றெல்லாம் அவர் கட்டுப்படுத்தவில்லை. நாங்கள் இருவரும் பிரிவதற்கு சில காரணங்களால் எங்கள் இருக்கிறது.

ராதிகாவுக்கும் வரலெட்சுமிக்கும் தான் பிரச்சனை; ஆனால் முதல் மனைவி - ரகசியம் பகிர்ந்த சரத்குமார்! | Sarathkumar About His First Wife And Divorce

பாதைகளை நாங்கள் தனித்தனியாக தேர்ந்தெடுத்துக் கொண்டோம். மற்றபடி எங்கள் இருவருக்குள்ளும் எந்தவிதமான கால் புணர்ச்சியும் இல்லை. இப்போதும் நாங்கள் நண்பர்களாக பயணிக்கிறோம். அனைவரையும் ஒன்றாக இருப்பதை பார்ப்பதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

ஆரம்பத்தில் வரலட்சுமியும், ராதிகாவும் பழகும் போது சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தது உண்மை தான். ஆனால், காலம் செல்ல செல்ல அதுவும் மாறிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.