நித்திஷ் ரெட்டியை தூக்குனாதான் இந்தியா ஜெயிக்கும்; இதனால்தான்.. சஞ்சய் மஞ்சுரேக்கர் வார்னிங்!
இந்திய அணி கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
நிதீஷ் குமார் பேட்டிங்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் களத்தில் உள்ளன.
இதில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிதீஷ் குமார் ரெட்டி 163 ரன்களையும், 2 விக்கெட்டுகளையும் விளாசியுள்ளார். மேலும் இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் விளாசியவரும் இவர்தான்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், நிதீஷ் குமார் ரெட்டி திறமையான பேட்ஸ்மேன் என்பதில் எந்த மாற்றும் கருத்தும் கிடையாது. தரமான பவுலிங்கை எதிர்த்து விளையாடும் போது அவரின் பேட்டிங்கும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம் அடைகிறது.
சஞ்சய் கருத்து
ஏனென்றால் முதல்தர கிரிக்கெட்டில் கூட நிதீஷ் குமார் ரெட்டி இவ்வளவு ரன்களை விளாசியதில்லை. இவரைப் போன்ற திறமையான பேட்ஸ்மேன்களை பார்ப்பதே அரிதான விஷயம் தான். ஆனால் அடுத்த டெஸ்ட் போட்டியில் நிதீஷ் குமார் ரெட்டியை தேர்வு செய்வதற்கு முன் இந்திய அணி நிர்வாகம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
ஏனென்றால் இந்திய அணியின் பேலன்ஸில் நிச்சயம் பிரச்சனை இருக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் பிரச்சனைகளை சமாளிப்பதோடு, பவுலிங்கை வலிமைப்படுத்த வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. நிதீஷ் குமார் ரெட்டி ஸ்பார்க்கை காட்டிவிட்டார். ஆனால் முழுமையாக பேட்ஸ்மேனாக மட்டும் அவரை விளையாட வைப்பது கொஞ்சம் ரிஸ்க் என்று தெரிவித்துள்ளார்.