ஹோட்டல் அறையில் என்ன வேலை? இந்திய வீரர்கள் குறித்து கவாஸ்கர் காட்டம்!
இந்திய வீரர்களுக்கு கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.
மோசமான ஆட்டம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டத்தில் மிக குறைந்த அளவில் ஓவர்கள் வீசி முடிவுகள் காணப்பட்டது.
டெஸ்ட் போட்டி தொடங்கி இரண்டரை நாட்களுக்குள்ளேயே போட்டி முடிவடைந்து விட்டது. இதனால் அணி வீரர்களுக்கு கூடுதலாக இரண்டு நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து விட்டது. இனி இதை ஐந்து டெஸ்ட் போட்டி என மறந்து விடுங்கள். இனிமேல் இது மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தான்.
கவாஸ்கர் அறிவுரை
எனவே இந்திய அணி வீரர்கள் அடுத்த இரண்டு நாட்களை சரியான முறையில் பயிற்சிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஹோட்டல் ரூமில் அடைந்து கொள்ளாதீர்கள். நீங்கள் கிரிக்கெட் விளையாட தான் இங்கு வந்திருக்கிறீர்கள். காலையிலோ, இல்லை மாலையிலேயோ ஒரு செஷன் பயிற்சி செய்து கொள்ளுங்கள்.
இந்த இரண்டு நாட்களிலும் வீணடித்து விடாதீர்கள். ஆஸ்திரேலிய தொடரில் நீங்கள் மொத்தம் 57 நாட்கள் இருக்கப் போகிறீர்கள். இதில் 5 டெஸ்ட் ஐந்து நாட்கள் விளையாடி இருந்தால் 25 நாட்கள் தான் டெஸ்ட் விளையாடுவீர்கள் கூடுதலாக இரண்டு நாள் பயிற்சி ஆட்டம் விளையாடி இருப்பீர்கள். எனவே 57 நாட்களில் நீங்கள் 30 நாட்கள் சும்மா தான் இருக்கப் போகிறீர்கள்.
தற்போது ஒரு நாள் பெர்தில் கூடுதலாக உங்களுக்கு கிடைத்தது. தற்போது இரண்டு நாட்களுக்கு முன்பே போட்டி முடிவடைந்து விட்டதால் தற்போது ஒரு இரண்டு நாட்கள் கிடைத்து இருக்கிறது. எனவே இந்த நேரத்தை வீணடிக்காமல் தயவு செய்து களத்திற்கு வந்து பயிற்சி செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.