தோல்விக்கான காரணம் இதுதான் - வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ரோஹித் சர்மா
2வது டெஸ்டில் இந்திய அணியின் தோல்வி குறித்து ரோஹித் சர்மா பேசியுள்ளார்.
பார்டர்-கவாஸ்கர் தொடர்
இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
அடிலெய்டு மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா தோல்வி
டாஸ் வென்று இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனையடுத்து முதல் இன்னிங்க்ஸை ஆடிய ஆஸ்திரேலியா, 337 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணி 175 ரன்களுக்கு சுருண்டது. 15 ரன்கள் வெற்றி இலக்கோடு ஆடிய ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரோகித் சர்மா
இந்நிலையில் தோல்வி குறித்து மனம் திறந்துள்ள கேப்டன் ரோகித் சர்மா, "போட்டியில் வெற்றி பெறும் அளவுக்கு நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. நாங்கள் இந்த போட்டியில் எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பிடிக்க தவறிவிட்டோம்.
உண்மையிலேயே இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் எங்களை விட சிறப்பாக பேட்டிங் செய்தார்கள்.பெர்த் டெஸ்ட்டில் செயல்பட்டதை போல, அடிலெய்டிலும் சிறப்பாக செயல்பட விரும்பினோம்.
ஆனால் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் அதற்கே உண்டான தனி சவால்கள் இருக்கின்றன. அடுத்த 3 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்" என கூறினார்.