எகிறிய முகமது ஷமி; ரோஹித் செய்த செயல் - வெடித்த வாக்குவாதம்!
ரோஹித் சர்மா மற்றும் முகமது ஷமி இடையே வாக்குவாதம் எழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ரோஹித் பேட்டி
2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடருக்கு பின் முகமது ஷமி இந்திய அணியில் இருந்து விலகினார்.
தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மீண்டும் போட்டிகளில் பங்கேற்பதற்கான உடற்திறன் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
இதற்கிடையில் பெங்களூருவில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடியது. அந்தப் போட்டி முடிந்த பின் கேப்டன் ரோஹித் சர்மா தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றிருந்தார். அந்த சமயம் ஷமிக்கும், ரோஹித் சர்மாக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததாக கூறப்படுகிறது.
கொதித்த ஷமி
முன்னதாக முகமது ஷமி இந்திய அணியில் பங்கேற்பாரா? என்ற பத்திரிக்கையாளர் கேள்விக்கு, "முகமது ஷமிக்கு முழங்காலில் வீக்கம் உள்ளது. அவர் 100 சதவிகிதம் தயாராக இருந்து தயாராகும் நிலையில் இருந்தார். ஆனால், இப்போது மீண்டும் முழங்காலில் அவருக்கு வீக்கம் ஏற்பட்டுள்ளது.
அவர் மீண்டும் முதலில் இருந்து உடல் திறனை மேம்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்." எனக் கூறியிருந்தார். அப்போதே முகமது ஷமி பந்து வீசும் வீடியோவை வெளியிட்டு அதற்கு பதிலடி கொடுத்திருந்தார்.
எனவே, இதுகுறித்து ஷமி காட்டமாக கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு ரோஹித் சர்மா கோபமாக பதில் அளித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.