பெண்ணாக மாறிய கிரிக்கெட் வீரரின் மகன் - யார் தெரியுமா?
சஞ்சய் பங்கரின் மகன் பெண்ணாக மாறியதை அறிவித்துள்ளார்.
சஞ்சய் பங்கர்
முன்னாள் இந்திய வீரரும், முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன். இவர் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொண்டு பெண்ணாக மாறியதாக அறிவித்துள்ளார்.

தனது பெயரை அனயா என மாற்றிக் கொண்டுள்ளார். உள்ளூர் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் இதற்கு முன்பு விளையாடி வந்தார். அவரது இந்த முடிவுக்கு பலரும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்
உருக்கமான பதிவு
"கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற எனது கனவுக்காக பல தியாகங்களை, போராட்டங்களை, அர்ப்பணிப்பை நான் மேற்கொண்டு இருந்தேன். ஒவ்வொரு நாளும் விடியற்காலை களத்துக்கு சென்று பலரது சந்தேகங்கள் மற்றும் முன் முடிவுகளுக்கு மத்தியில் எனது வலிமையை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தேன்.

ஆனால், இந்த ஆட்டத்தை தாண்டி எனக்கு இன்னொரு பயணமும் இருந்தது. என்னை நானே சுயமாக கண்டறிய வேண்டிய பாதையில் நிறைய சவால்களை சந்தித்தேன். எனது சுயத்தை அடைவதற்கு சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருந்தது.
இது அத்தனை எளிதாக இல்லை. இன்று இந்த விளையாட்டில் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. நான் வந்த பாதை எளிதானது அல்ல. ஆனால், எனது சுயத்தை நான் கண்டறிந்தது தான் மிகப்பெரிய வெற்றி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சுதந்திர ஊடக இயக்கம் மனுத் தாக்கல் IBC Tamil
ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு : நான் தவறாக வழி நடத்தப்பட்டேன் :மன்னிப்பு கோரினார் மைத்திரி IBC Tamil