கட்சியின் முக்கிய பொறுப்பில் அன்புமணி ராமதாஸ் மகள் - இதுதான் ஹாட் டாப்பிக்கே!

Anbumani Ramadoss Dharmapuri
By Sumathi Apr 11, 2024 10:38 AM GMT
Report

அன்புமணி ராமதாஸின் மூன்று மகள்களின் பிரச்சாரம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

சௌமியா அன்புமணி 

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தருமபுரி தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி களமிறக்கப்பட்டுள்ளார்.

அன்புமணி மகள்கள்

இந்நிலையில் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் விதமாக மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா களமிறங்கியுள்ளனர். தற்போது இதுதான் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இவர்கள் பேசும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

தர்மபுரியில் திடீர் மாற்றம்..? வேட்பாளரான சௌமியா அன்புமணி..!

தர்மபுரியில் திடீர் மாற்றம்..? வேட்பாளரான சௌமியா அன்புமணி..!

மகளுக்கு பொறுப்பு

முதல் மகளான சம்யுக்தா சில நாட்கள் தனது குழந்தைகளான அகிரா, மிளிர் ஆகியோருடன் பிரச்சாரத்தில் கலந்துகொண்டார். இரண்டாவது மகளான சங்கமித்ரா தனது கணவர் ஷங்கர் பாலாஜியுடன் வந்து தொகுதியிலேயே தங்கியிருந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

sowmya anbumani

மூன்றாவது மகள் சஞ்சுத்ராவும் தொகுதியில் தங்கியிருந்து தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து, தனது மகள் சங்கமித்ராவையும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவைக்க அன்புமணி தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியிலும் முக்கிய பொறுப்புகளை வழங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.