அது மட்டும் நடந்த போதும் - சவுமியா அன்புமணி பத்ரகாளியாகிடுவார்...அன்புமணி பரபரப்பு பேச்சு
அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் மக்களவை தேர்தல் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
பாமக
அதிமுக கூட்டணியை தவிர்த்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து பெரும் அதிர்வலைகளை தமிழக அரசியலில் ஏற்படுத்தியது பாமக. கூட்டணியில் 10 இடங்களையும் பெற்றுள்ள அக்கட்சி, வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.
பாமக சார்பில் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணி தர்மபுரியில் வேட்பாளராக களமிறக்கபட்டுள்ளார். சவுமியா அன்புமணிக்காக அவரது மகள்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று(03.03.24) அன்புமணி ராமதாஸ் சவுமியா அன்புமணிக்காக வள்ளலார் திடலில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பத்ரகாளி ஆகிடுவார்....
அப்போது அவர் பேசியது வருமாறு,
தர்மபுரியில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் எனக்கு தெரியும். அதற்கான தீர்வுகளும் எனக்கு தெரியும். இங்குள்ள பிரச்னைகளை தீர்க்க அதிகாரம் நம்மிடம் வேண்டும். கை எழுத்து போடும் அதிகாரம் வந்தால் தான், ஒரே நாளில் 90% சதவீத பிரச்னையை என்னால் தீர்க்க முடியும்.
பெண்களுக்கு பிரச்சனை என்றால் முதல் ஆளாக அந்த இடத்திற்கு சென்று அவர்களது நியாயம் வாங்கி கொடுப்பவர் சவுமியா. பெண்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் அவர் பத்ரகாளி ஆகிடுவார். அப்படிப்பட்டவரை நீங்கள் நாடாளுமன்ற வேட்பாளராக்குங்கள்.