தர்மபுரியில் திடீர் மாற்றம்..? வேட்பாளரான சௌமியா அன்புமணி..!
தருமபுரி தொகுதி மக்களவை வேட்பாளராக பாமக சார்பில் சௌமியா அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக - பாமக கூட்டணி
பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், ஓபிஎஸ் அணி, அமமுக, பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் போன்றோர் கூட்டணி அமைத்துள்ளனர்.
எதிர்பாராத விதமாக பாமக - பாஜக கூட்டணி அமைந்த நிலையில், அது தேர்தல் அரசியலில் எம்மாதிரியான மாற்றத்தை கொண்டுவரும் என்பதை தேர்தல் முடிவில் தான் பார்க்கவேண்டும்.
வேட்பாளர் பட்டியல்
தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், வேட்பாளர்களை கட்சிகள் மாறி மாறி அறிவித்து வருகிறார்கள். நேற்று பாஜகவின் வேட்பாளர், ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போன்றோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பாமக வேட்பாளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தர்மபுரியில் வேட்பாளராக அரசாங்கம் நிறுத்தப்பட்டார். இவர் தருமபுரி மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் இருக்கின்றார்.
தர்மபுரியில் போட்டியிடும் திமுகவின் ஆ.மணி, அதிமுகவின் அசோகன் ஆகியோரை எதிர்த்து களமிறங்க, பலமான வேட்பாளர் தேவை என்ற கருத்துக்கள் அதிகமாக பேசப்பட்டது.
இந்நிலையில் தான் தற்போது தருமபுரி தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் சௌமியா அன்புமணி. பசுமை தாயகத்தின் தலைவருமான சௌமியா அன்புமணி அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ளார்.