லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் நடிகை சமந்தா - புதிய தகவல்
லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னணி நடிகை
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, கடைசியாக விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் சேர்ந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சமந்தா சோலோ ஹீரோயினாக கலக்கியுள்ள யசோதா திரைப்படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
மேலும், சாகுந்தலம் என்ற புராண படத்தில் சமந்தா ஏற்கனவே நடித்து முடித்துள்ள நிலையில், விஜய் தேவரகொண்டாவுடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராகும் குஷி என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
மீண்டும் இணையும் ஜோடி
முன்னதாக கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த சமந்தா நடிப்பில் அசத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக உருவெடுத்தார். இந்த படங்களை தொடர்ந்து மீண்டும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் கடைசியாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது அவர் தெலுங்குப்பட இயக்குனர் வம்சி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தை முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 67-வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தில் விஜய் ஜோடியாக எந்த நடிகை நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்நிலையில் விஜய்-67 படத்தில் சமந்தாவை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க அவரிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘தமிழ் பேசவே பயமா இருக்கு’ - பிரபல நடிகர் ஓப்பன் டாக்