‘தமிழ் பேசவே பயமா இருக்கு’ - பிரபல நடிகர் ஓப்பன் டாக்

Nazriya Nazim Nani
By Swetha Subash Jun 06, 2022 05:56 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சினிமா
Report

தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் நானி. இவர் வெப்பம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

புதிய படம்

தொடர்ந்து நடிகை சமந்தாவுடன் நானி, ஆஹா கல்யாணம் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவிலும் வளர்ந்து வரும் நடிகராக மாறினார். இந்த படங்களை தொடர்ந்து அவர் பெரிதாக தமிழில் நடிக்க கமிட் ஆகவில்லை.

‘தமிழ் பேசவே பயமா இருக்கு’ - பிரபல நடிகர் ஓப்பன் டாக் | Actor Nani Fears To Speak In Tamil

இவர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு ஷான் சிங்கா ராய் என்ற படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை ராகுல் சங்கிரித்யன் என்பவர் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கில் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நடிகை நஸ்ரியா ஜோடியாக நானி நடித்துள்ள ‘அன்டே சுந்தரானிகி’ படம், ‘அடடே சுந்தரா’என தமிழில் டப்பிங் செய்யப்பட்டு, வருகிற 10-ம் தேதி வெளியாக இருக்கிறது.

நானி ஒப்பன் டாக்

இந்த படத்தை குறித்து பேசிய நானி, “ஷாம் சிங்கா ராய் போன்ற ஆக்‌ஷன் படத்தில் நடித்துவிட்டு, அடடே சுந்தரா போன்ற காதலும், காமெடியும் கலந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தின் கதை தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளைக் கடந்து, அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

‘தமிழ் பேசவே பயமா இருக்கு’ - பிரபல நடிகர் ஓப்பன் டாக் | Actor Nani Fears To Speak In Tamil

இதற்கு முன்பும் நான் தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும், சரளமாக தமிழில் பேச முடியவில்லை. ஏதாவது தப்பாகப் பேசிவிடுவோமோ என்ற பயம் இருக்கிறது. தமிழில் தெளிவாகப் பேச கற்றுக்கொண்டு, தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” என தெரிவித்தார். 

விஜய்யின் படங்களை பார்க்காதீர்கள் : கொந்தளித்த மதுரை ஆதீனம்