விஜய்யின் படங்களை பார்க்காதீர்கள் : கொந்தளித்த மதுரை ஆதீனம்

Vijay Tamil nadu
By Irumporai Jun 06, 2022 04:24 AM GMT
Report

இந்து சமய அறநிலையத் துறையை கலைத்து விட வேண்டும் என்றும் நடிகர் விஜய் படங்களகை யாரும் பார்க்க வேண்டாம் எனவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

மதுரை பழங்காலத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மதுரை ஆதீனம், பாரதியார் தற்போது இருந்திருந்தால் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே என்று கூறியிருப்பார்.

கோயில்களுக்குள் அரசியல் புகுந்து விட்டது

அந்த அளவுக்கு மது கடைகளின் ஆதிக்கம் இங்க அதிகரித்துவிட்டது. கோயில்களுக்குள் அரசியல் புகுந்து விட்டது. ஆன்மீகவாதிகள் அரசியல் பேசக்கூடாது என்று சொல்கிறார்கள்.

விஜய்யின் படங்களை பார்க்காதீர்கள் : கொந்தளித்த  மதுரை ஆதீனம் | Department Of Hindu Religious Should Be Dissolved

நாங்கள் ஏன் அரசியல் பேசக்கூடாது ?ஆதினங்கள் அரசியல் பேசக் கூடாது என்கிறார்கள். அரசியலை நாங்கள் பேசாமல் யார் பேசுவது? திருக்கோவில் சொத்துக்கள் இங்கு தொலைந்து போகிறது.

தமிழகத்தின் பண்பாடு கலாச்சாரம் திருக்கோயில் தான். அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை? என்னுயிர்த் தலைவா என்பதை தல என்று மாற்றி விட்டார்கள். திராவிடம் என்று சொல்லிக்கொண்டு இறந்தவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள்.

விஜய்யின் படங்களை பார்க்காதீர்கள் : கொந்தளித்த  மதுரை ஆதீனம் | Department Of Hindu Religious Should Be Dissolved

கோயில் இடங்களை ஆளும் கட்சியினரும் , எதிர் கட்சியினரும் எடுத்துக்கொள்கின்றனர். ஆன்மிகத்தை திருடிக்கொண்டு திராவிடம் என்று சொல்கிறார்கள். இலவசமாக கோவணமும் திருவோடும் கொடுக்கும் திட்டத்தை மட்டும் பாக்கி வைத்துள்ளது திராவிட கட்சிகள்.

விஜய்யின் படங்களை பார்க்காதீர்கள்

அறநிலையத்துறையை கலைத்துவிட வேண்டும் .கோயில்கள் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் , ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இயங்கவேண்டும் என்றார்.தொடர்ந்து பேசிய அவர், இந்துக்களை அவமதிக்கும் விஜய்யின் படங்களை பார்க்காதீர்கள்.

விஜய்யின் படங்களை பார்க்காதீர்கள் : கொந்தளித்த  மதுரை ஆதீனம் | Department Of Hindu Religious Should Be Dissolved

கடவுளை இழிவுபடுத்துபவர்களை நாம் எதிர்த்தால் சங்கி என்று சொல்கிறார்கள். சாலமன் பாப்பையாவுக்கு பல்லக்கு தூக்கும்போது தர்மபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்க கூடாது என்றார். 

[எனக்கு சாவே கிடையாது... திரும்பி வந்த நித்தி..அவரே கைப்பட எழுதிய கடிதம் வெளியீடு