எனக்கு சாவே கிடையாது... திரும்பி வந்த நித்தி..அவரே கைப்பட எழுதிய கடிதம் வெளியீடு
சாமியார் நித்தியானந்தா உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா சர்ச்சை வீடியோ ஒன்றில் சிக்கினார். அதனைத் தொடர்ந்து பாலியல் புகார், ஆள் கடத்தல் வழக்குகள் எனப் பல்வேறு சர்ச்சைகளில் பிரபலமான நித்தி கைலாசா என்ற இந்துக்களுக்கான தனி நாட்டை உருவாக்கியிருப்பதாக தெரிவித்தார். அதன்பின் கடந்த 2 ஆண்டுகளாக அங்கிருந்து அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.
இதனிடையே அவர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்துவிட்டதாகவும், ஏற்கெனவே எடுக்கப்பட்ட வீடியோக்களைத்தான் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தான் உயிரோடு இருப்பதாக நித்தி கடிதம் மூலம் விளக்கியிருந்தார். இந்நிலையில் அவர் கோமா நிலைக்கு சென்று இருப்பதாகவும் செயற்கை சுவாசம் உள்ளிட்ட சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பதினைந்து நாட்களாக நித்தியானந்தா படுத்த படுக்கையாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சுவாமி நித்தியானந்தா முழுக்க முழுக்க சமாதி நிலைக்கு சென்றுள்ளதாகவும், பக்தர்கள் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்யும்படி கைலாசா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் என்னுடைய பக்தர்கள் மற்றும் சீடர்கள் அனைவருக்கும் - சமாதி நிலையிலிருந்து நேரடியாக அருள் வெளிப்பாடுகளும் நேரடி ஒளிபரப்பும் .. உங்களின் எண்ணங்களின் மூலத்தை... அதாவது உண்மையான உங்களை ( உங்கள் ஆன்மாவை) ஆழ்ந்து ஊடுருவி கவனிக்க உங்கள் மனம் பயப்படுகிறது.
இந்த பயமே அனைத்து மனித ஜீவன்களின் பிரச்சனையாகும். விண்வெளிக்குச் சென்று திரும்பியவர்களின் மரபணு அமைப்பே, அது மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியா அளவுக்கு மாற்றமடைய தொடங்குவதை, அவர்கள் மீது நடத்தப்பட்ட பல அறிவியல் ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் காட்டுகின்றன.
அதேபோன்று கடிதம் எழுதிய தேதி இடப்பட்ட புகைப்படங்களை இணைத்துள்ளேன். வளப்படுத்துங்கள் & ஆனந்தமாக இருங்கள், பகிருங்கள் & கொண்டாடுங்கள் ! என அந்த கடித்தத்தில் கூறப்பட்டுள்ளது.