சமந்தாவின் புதிய பாய் ஃபிரென்டா? யார் இந்த நபர் - வைரலாகும் வீடியோ

Samantha Naga Chaitanya Tamil Actress Sobhita Dhulipala Actress
By Karthikraja Oct 21, 2024 10:30 PM GMT
Report

சமந்தா ஒரு நபருடன் கை கோர்த்து செல்லும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தா

2010 ஆம் ஆண்டு தமிழில் "விண்ணைத்தாண்டி வருவாயா" என்கின்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமந்தா. 

இதன் பின் பானா காத்தாடி என்கிற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் சமந்தா. 

தெலுங்கு திரையுலகிலும் பாலியல் தொல்லை - பரபரப்பை கிளப்பும் சமந்தா

தெலுங்கு திரையுலகிலும் பாலியல் தொல்லை - பரபரப்பை கிளப்பும் சமந்தா

விவாகரத்து

2017 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான பிரபல நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். 2021 ஆம் ஆண்டு இருவரும் விவகாரத்தை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

சமந்தா

நாக சைதன்யா தற்போது பிரபல நடிகை சோபிதா துலியாவை திருமணம் செய்ய உள்ளார். ஆனால் சமந்தா தற்போது வரை வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

வைரல் வீடியோ

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு திருமண நிகழ்வில் இருந்து ஒரு நபருடன் சமந்தா கைகளை கோர்த்துக்கொண்டு வெளியேறிய வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நபர்தான் சமந்தாவின் புதிய காதலர் என்றும், அவர் யார் என்பது தெரியவில்லை என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இவர் சமந்தாவின் நீண்ட கால நெருங்கிய நண்பர் என்றும், அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாகவும், அவருடைய இல்ல நிகழ்வில் கலந்து கொள்ளதான் சமந்தா சென்றுள்ளார் என ரசிகர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.