முதல் பார்வையிலே காதல் - WPL சென்னை அணியின் உரிமையாளர் ஆன சமந்தா
WPL சென்னை அணியை நடிகை சமந்தா வாங்கியுள்ளார்.
சமந்தா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சினிமாவில் நடித்து வருவதோடு விளையாட்டு துறையிலும் கால் பதித்துள்ளார் சமந்தா.
சோனி என்டர்டெயின்மென்ட் டேலண்ட் வென்ச்சர்ஸ் மற்றும் அகில இந்திய பிக்கிள்பால் அசோசியேஷன் (AIPA) உடன் இணைந்து நடேகர் ஸ்போர்ட்ஸ் மற்றும் கேமிங் உலக பிக்கிள்பால் லீக் போட்டியை இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளது.
World Pickleball League
ஜனவரி 2025 ல் நடக்க உள்ள இந்த தொடரில் மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய ஏழு நகரங்களை இலக்காகக் கொண்டு ஆறு அணிகள் இறுதி செய்யப்பட உள்ளன. இதில் சென்னை அணியின் உரிமையை சமந்தா கைப்பற்றியுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள சென்னை அணியின் உரிமையாளர் சமந்தா, முதல் பார்வையிலே காதல் போன்று பிக்கிள் பந்துக்கான எனது உணர்வுகளை நான் எப்படி விவரிப்பேன். எனக்கு அறிமுகமானதில் இருந்தே அது என் கவனத்தை ஈர்த்தது. இன்று, வரவிருக்கும் உலக பிக்கிள் பந்தாட்ட லீக்கில் சென்னை அணிக்கு உரிமையாளராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் எப்போதுமே இந்தியாவின் வளர்ந்து வரும் விளையாட்டு சூழலின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன்.
சமீபத்திய ஆண்டுகளில், விளையாட்டுகளில் பெண்களின் பங்கேற்பில் கணிசமான அதிகரிப்புடன், பல விளையாட்டுகளில் நமது நாடு பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும் பெண்கள் மற்றும் இளம் பெண்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிப்பதே எனது குறிக்கோள் என பேசியுள்ளார்.