பிரபல இயக்குனரை காதலிக்கும் சமந்தா? தீயாய் பரவும் புகைப்படம்!
இயக்குனர் ராஜ் நிதிமோருவை சமந்தா காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது.
சமந்தா
திரையுலகின் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை சமந்தா. எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவருக்கு முன்னாள் கணவர் நாகசைதன்யாவுடன் விவாகரத்து ஆன நிலையில், இருவரும் கெரியரில் பிஸியாக இருந்து வருகின்றனர்.
இயக்குனருடன் டேட்டிங்
சமீபத்தில் நடிகை சோபிதா துலிபாலாவுடன், நாகை சைதன்யாவுக்கு திருமண நிச்சயம் நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவை டேட்டிங் செய்து வருவதாக தகவல் பரவி வருகிறது.
சிட்டாடல் வெப் தொடரின் இயக்குனர் ராஜ் நிடிமோரு. தி பேமிலி மேன் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.