திருமணமான இயக்குநருடன் மீண்டும் காதலில் விழுந்த சமந்தா - படு வைரலாகும் புகைப்படம்!
சமந்தா சென்னை சூப்பர் சாம்பியன்ஸ் அணியுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
சமந்தா
நடிகை சமந்தா சமீபத்தில் உலக பிக்கில் பால் லீக்கில் (World Pickleball League) பங்கேற்கும் சென்னை அணியைச் சொந்தமாக வாங்கியிருந்தார்.
தொடர்ந்து உலக பிக்கில் லீக் போட்டியில் சென்னை சூப்பர் சாம்பியன்ஸ் அணியுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அதில், சிட்டாடல் வெப் தொடர் இயக்குநர் ராஜ் நிடிமோருவின் கைகளை சமந்தா பிடித்திருக்கும் புகைப்படம் வைரலானது.
டேட்டிங்
இதனையடுத்து இருவரும் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் வெளியானது. விரைவில் இருவரும் தங்களது புதிய உறவை பற்றி அறிவிப்பார்கள் எனவும் பாலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டது.
இயக்குநர் ராஜ் நிடிமோரு மற்றும் இயக்குநர் டிகே இணைந்து தி ஃபேமிலி மேன், ஃபார்ஸி, சிட்டாடல்: ஹனி பன்னி மற்றும் கன்ஸ் & குலாப்ஸ் போன்ற வெப் சீரிஸை இயக்கியுள்ளனர்.
இதில் தி ஃபேமிலி மேன் 2 மற்றும் சிட்டாடல்: ஹனி பன்னி ஆகிய வெப் தொடர்களில் சமந்தா நடித்திருந்தார்.