15 வருட காதல்; விஷாலுடன் திருமணமா? - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அபிநயா
15 வருடங்களாக காதலித்து வருவதாக நடிகை அபிநயா தெரிவித்துள்ளார்.
நடிகை அபிநயா
நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிநயா. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
விஷாலுடன் பூஜை, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து விஷாலும் ஐவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் பரவியது.
15 வருட காதல்
இந்நிலையில் நடிகை அபிநயா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார். இதில் பேசிய அவர், "நான் 15 வருடங்களாக உடன் படித்த ஒருவரை காதலித்து வருகிறேன். அவரிடம் என்னால் என்ன வேணாலும் பேச முடியும். எந்த விதமான ஜட்ஜ்மெண்ட்டும் இருக்காது.
எங்களுடைய திருமணம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கு இன்னும் நேரம் உள்ளது. நான் செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளது. விஷால் ரொம்ப தங்கமான மனுசன். என்கிட்ட சைன் லாங்குவேஜ் கத்துக்க சொல்லுவாரு. நாங்க ஒண்ணா தான் உட்கார்ந்து சாப்பிடுவோம்.
எங்களை பத்தி வரும் வதந்திகள் எல்லாம் ரொம்ப முட்டாள்தனமானது. எனக்கு விஷால் ப்ரொபோஸ் பண்ணுனாரு, எங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகப்போகுதுன்னு வர்ற செய்தி எல்லாம் நம்பாதீங்க" என கூறினார். வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான அபிநயா தனது சைகை மொழியில் பேசினார். அபிநயாவின் காதலுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.