த்ரிஷாவும், நானும் டேட் செய்தோம்; ஆனால்., ரகசியம் உடைத்த ராணா!
த்ரிஷா உடனான உறவு குறித்து ராணா பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
நடிகை த்ரிஷா
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸாகி வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி வருகிற பிப்ரவரி 6-ந் தேதி திரைக்கு வரவுள்ளது.
ராணா தகவல்
இதற்கிடையில் ராணாவும், த்ரிஷாவும் காதலித்ததாக முன்பு பல ஆண்டுகளாக பேசப்பட்டது. ஆனால், ராணா மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வரும் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ராணா முன்னதாக பேசுகையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக த்ரிஷா என் தோழியாக இருந்து வருகிறார்.
நாங்கள் பல காலமாக நண்பர்கள், டேட் கூட செய்தோம். ஆனால் டேட்டிங் ஒர்க்அவுட் ஆகவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இருவருமே எதுவும் பேசாத நிலையில், இந்த தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
