நடிகை ரம்யாவுக்கு திருமணம்? காதலனுடன் இருக்கும் புகைப்படம் வைரல்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகை ரம்யா திருமணம் செய்துகொள்ளப் போவதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகை ரம்யா
தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. இவரின் திருமணம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாவது வழக்கம்.
இந்நிலையில், ரம்யா காதலனின் புகைப்படம் என்று புகைப்படம் ஒன்று வைரலானது. “சாண்டல்வுட் ஹாட்டி ரம்யாவின் காதலன் சஞ்சீவ் மோகன். ரம்யாவை அவர் டிவ்ஸ் என அழைக்கிறார்.
உண்மை என்ன?
இருவரும் இந்த வருடம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள்” என்று முகநூல் பக்கம் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படங்களைப் பகிர்ந்த பலரும் ரம்யாவின் திருமணம் தொடர்பாக கருத்துகளைப் பதிவிட்டனர்.
ஆனால் இதன் உண்மை தன்மையை ஆராய்கையில், இந்த புகைப்படம் ஒரு வருடம் பழமையானது. இந்த புகைப்படத்தை இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது ரம்யா க்ளிக் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வைரல் புகைப்படத்தை பகிர்ந்து Fake எனக் குறிப்பிட்டு ஸ்டோரி வைத்திருந்தார்.