நிற்கவே முடியாமல் தடுமாறும் சமந்தா; ஷூட்டிங் ஸ்பாட்டில் மயக்கம் - என்னாச்சு?
ஷூட்டிங் ஸ்பாட்டில் சமந்தா மயங்கி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் சூர்யா, விக்ரம், விஜய் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வலம் வந்தவர் நடிகை சமந்தா. தெலுங்கிலும் கலக்கி வருகிறார். நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தினார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்தனர். தொடர்ந்து, சினிமாவில் பட்டையை கிளப்பினார்.
ஷுட்டிங்கில் மயக்கம்
தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு அவர் கமிட்டான சூழலில் மையோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக பல மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துவந்தார். அதன்பின் சிறிது மீண்ட நிலையில் சாகுந்தலம், குஷி படங்களின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில், தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். அந்த தொடரின் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட சமந்தா, ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிக்கும் போது மயக்கமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று இப்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil